Tap to Read ➤

உலகக் கோப்பை போட்டியில் அதிக கோல்கள் அடித்த டாப் 5 வீரர்கள்!

1930-ல் முதல் முறையாக உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது.
HTML Tamil
உலகக் கோப்பை கால்பந்து போட்டி, கத்தார் நாட்டில் நவம்பர் 21-ம் தேதி தொடங்குகிறது.
உலகிலுள்ள கால்பந்து ரசிகர்கள், உலகக் கோப்பை போட்டியைக் காண, கத்தார் நாட்டிற்கு ஆவலுடன் வந்த வண்ணம் உள்ளனர்.
இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடர்களில், பிரேசில் அணி அதிகபட்சமாக 5 முறை, உலகக் கோப்பையை வென்றுள்ளது.
உலகக் கோப்பை போட்டிகளில், அதிக கோல்களை அடித்த டாப் 5 வீரர்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
மிரோஸ்லாவ் க்ளோஸ்

ஜெர்மனியைச் சேர்ந்த மிரோஸ்லாவ் க்ளோஸ்தான், உலகக் கோப்பையில் அதிகபட்சமாக 16 கோல்களை அடித்து முதலிடத்தில் உள்ளார்.
உலகக் கோப்பை போட்டியில் 24 ஆட்டங்களில் பங்கேற்று 16 கோல்களை அடித்து, மிரோஸ்லாவ் க்ளோஸ் அசத்தியுள்ளார்.
ரொனால்டோ

 பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோ, 19 ஆட்டங்களில் விளையாடி, 15 கோல்களை அடித்து, 2-ம் இடத்தில் உள்ளார்.
ஜெர்ட் முல்லர்

ஜெர்மனியின் ஜெர்ட் முல்லர், உலகக் கோப்பையில் 14 கோல்களை அடித்துள்ளார். 1970-ல் நடைபெற்ற போட்டியில் 10 கோல்களை அடித்த இவருக்கு, தங்க ஷூ வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஜஸ்ட் போன்டைன்

ஃபிரான்ஸ் வீரரான போன்டைன், 1958-ல் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் மட்டுமே பங்கேற்று, 6 ஆட்டங்களில் 13 கோல்களை அடித்தார்.
பீலே

கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படும் பிரேசில் நாட்டின் பீலே, உலகக் கோப்பை போட்டியில், 12 கோல்கள் அடித்து 5-ம் இடத்தில் உள்ளார்.