Tap to Read ➤

டி20 உலக கோப்பை -  சாதித்த  வீரர்கள் !

டி20 உலக கோப்பையில் சாதனை படைத்த வீரர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
HTML Tamil
ஐசிசி டி20 உலக கோப்பைப் போட்டி, கடந்த 2007-ம் ஆண்டு முதல் இதுவரை 7 முறை நடத்தப்பட்டுள்ளது.
8-வது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இதுவரை நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களை தெரிந்து கொள்வோம்.
அதிக ரன்கள் குவிப்பு

 அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் இலங்கை வீரர் மகிளா ஜெயவர்த்தனே 1,016 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
அதிக சிக்சர்கள்

டி20 உலக கோப்பையில், 31 ஆட்டங்களில், 63 சிக்சர்களை விளாசி, வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார்.
அதிக விக்கெட்டுகள்

 பங்களாதேஷின் ஆல் ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன், 41 விக்கெட்டுகளை எடுத்து, பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
சிறப்பான பந்து வீச்சு

 2012-ல் நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில், இலங்கை வீரர் அஜந்தா மென்டிஸ், 8 ரன்கள் மட்டுமே கொடுத்து, 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
கேப்டன் பொறுப்பு

 இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, 33 போட்டிகளில் கேப்டனாக பணியாற்றி சாதனை படைத்துள்ளார்.
அதிக போட்டிகள்

  இலங்கையைச் சேர்ந்த அதிரடி வீரர் திலகரத்ன தில்ஷன், அதிகபட்சமாக 35 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
அதிக கேட்ச் 

 தென்னாப்பிரிக்காவின் ஆல் ரவுண்டர் ஏபி டி-வில்லர்ஸ், 30 ஆட்டங்களில் பங்கேற்று, 23 கேட்ச் பிடித்து முதலிடத்தில் உள்ளார்.