Tap to Read ➤

பணக்கார வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்ட டாப் நடிகர்கள் !!

அந்த லிஸ்டில் தளபதி விஜய் உள்ளார்..!!
Sidhanathan K
தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகர்கள் சிலர் பணக்கார வீட்டுப் பெண்களை மணந்துள்ளனர்.
1. ஜூனியர் என்.டி.ஆர்

 பிரபல தெலுங்கு நடிகர் என்.டி.ராமாராவின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர். 2011ல் லட்சுமி பிரணதியை திருமணம் செய்து கொண்டார்.
லட்சுமியின் தந்தை தெலுங்கில் செய்தி சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதேபோல் லட்சுமியின் தாயார் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
2. அல்லு அர்ஜுன்

தெலுங்கு முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் 2011ம் ஆண்டு சினேகா ரெட்டியை திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் நடந்தது.
சினேகா ரெட்டியின் பெற்றோர் கஞ்சரியா ரெட்டி மற்றும் கவிதா ரெட்டி இருவரும் தொழில் அதிபர்கள். இவர்கள் கல்லூரி ஒன்றையும் நடத்தி வருகிறார்கள்.
3. ராம்சரண்

நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண், உபாசனா காமினேனியை கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
அப்பல்லோ பவுண்டேஷனை உபாசனா தான் நிர்வகித்து வருகிறார். இவரது தந்தை KEI குரூப் என்கிற மின்னணு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
4. விஜய்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தனது ரசிகையான சங்கீதாவை காதலித்து கடந்த 1999-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். சங்கீதாவின் தந்தை சொர்ணலிங்கம் தொழிலதிபர் ஆவார்.
5. துல்கர் சல்மான்

மலையாள நடிகர் மம்முட்டியின் மகனும் நடிகருமான துல்கர் சல்மான் 2011 ஆம் ஆண்டு அமலை மணந்தார். அமலின் தந்தை ஒரு பெரிய தொழிலதிபர்.
6. ராணா டகுபதி

நடிகர் ராணா டகுபதி மஹிகா பஜாஜை காதலித்து 2020 இல் திருமணம் செய்து கொண்டார்.
மஹேகா பஜாஜ் இன்டீரியர் டிசைன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது தாயார் க்ர்சல (Krsala) ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.