Tap to Read ➤

திட்டமிட்ட நேரத்தில் சரியான சேவைகளை வழங்கும் டாப் விமானங்கள்..!!

விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட 6 விமானங்களின் பட்டியல்..!
Sidhanathan K
விமானப் போக்குவரத்து இயக்குனரகம், குறிப்பிட்ட நேரத்தில் பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் முறையான சேவைகளை வழங்குகின்றனவா என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.
2022 ஜனவரி முதல் அக்டோபர் வரை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட விமான நிலையங்களில் இருந்து, விமானங்கள் வந்து செல்லும் மற்றும் புறப்படும் நேரத்தை கணக்கிட்டு இந்த பட்டியலை பொது விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
1. ஏர் இந்தியா

ஏர் இந்தியாவின் 90.8 சதவீத விமானங்கள் சரியான நேரத்தில் பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.
2. விஸ்தாரா

விஸ்தாராவின் விமானங்கள் 89.1 சதவீத புள்ளிகளுடன் பயணிகளை சரியான நேரத்தில் ஏற்றிச் செல்கின்றன.
3. ஏர் ஏசியா

இதுவும் 89.1 சதவீத புள்ளிகளுடன் துல்லியமான நேரத்தில் விமான பயணிகளை ஏற்றி செல்கின்றன.
4. இண்டிகோ

இண்டிகோவின் விமானங்கள் 87.5 சதவீத புள்ளிகளுடன் சரியான நேரத்தில் பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.
5. ஸ்பைஸ் ஜெட்

ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் 68.9 சதவீத புள்ளிகளுடன் துல்லியமான நேரத்தில் விமான பயணிகளை ஏற்றி செல்கின்றன.
6. கோ ஃபர்ஸ்ட்

கோ ஃபர்ஸ்ட்டின் 60.7 சதவீத விமானங்கள் துல்லியமான நேரத்தில் விமான பயணிகளை ஏற்றி செல்கின்றன.