Tap to Read ➤

டி20 உலக கோப்பை - அதிக ரன்கள் குவித்த டாப் 10 வீரர்கள்

ஐசிசி டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
HTML Tamil
ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ள 8-வது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தற்போது 'சூப்பர் 12' சுற்றுக்கு முன்னேறுவதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இத்தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் களமிறங்கியுள்ளன.
இதுவரை நடைபெற்ற ஐசிசி டி20 உலக கோப்பைத் தொடர்களில், அதிக ரன்கள் குவித்த வீரர்களை பற்றி இப்போது பார்ப்போம்.
இலங்கை வீரர் மகிளா ஜெயவர்த்தனே, 31 போட்டிகளில் பங்கேற்று, 1016 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்துள்ளார். இவரின் அதிகபட்ச ரன் 100 ஆகும்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் 33 ஆட்டங்களில் பங்கேற்று, 965 ரன்கள் எடுத்து 2-ம் இடத்தில் உள்ளார். ஒரு போட்டியில் 117 ரன்கள் குவித்துள்ளார்.
இலங்கையின் அதிரடி வீரர் திலகரத்ன தில்ஷன் 35 போட்டிகளில் பங்கேற்று 897 ரன்கள் குவித்து 3-ம் இடத்தில் உள்ளார்.
இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா 33 போட்டிகளில் கலந்துகொண்டு 847 ரன்களை குவித்து 4-ம் இடத்தில் உள்ளார்.
இந்தியாவின் முன்னாள் கேப்டனும், அதிரடி வீரருமான விராட் கோலி, 21 போட்டிகளில் கலந்துகொண்டு 845 ரன்கள் எடுத்து 5-ம் இடத்தை பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் டேவிட் வார்னர், 30 போட்டிகளில் பங்கேற்று, 762 ரன்கள் எடுத்து 6-ம் இடத்தில் உள்ளார்.
தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி-வில்லர்ஸ், 30 போட்டிகளில் கலந்துகொண்டு 717 ரன்கள் எடுத்து 7-ம் இடத்தை பிடித்துள்ளார்.
பங்களாதேஷின் ஆல் ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் 31 போட்டிகளில் பங்கேற்று 698 ரன்கள் எடுத்துள்ளார். இவர் 41 விக்கெட்டுகளை எடுத்து முதலிடத்தில் உள்ளார்.
இலங்கை வீரர் குமார் சங்கக்கார 31 போட்டிகளில் கலந்துகொண்டு 661 ரன்கள் எடுத்து 9-வது இடத்தில் உள்ளார்
பாகிஸ்தானைச் சேர்ந்த சோயிப் மாலிக், 34 போட்டிகளில் பங்கேற்று, 646 ரன்கள் எடுத்து 10-ம் இடத்தை பிடித்துள்ளார்.