Tap to Read ➤

அறிந்து கொள்வோம்..போக்குவரத்து காவல்துறையின் கை சைகைகள் !!

சாலை சந்திப்புகளில் போலீஸ் அதிகாரி காட்டும் கை சமிக்ஞைகளின் விவரங்கள் !!
Sidhanathan K
பரபரப்பான சாலை சந்திப்புகளில் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் காண்பிக்கும் கை சமிக்ஞைகளின் விவரங்களை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
இடது கையை நீட்டினால் பின்னால் வரும் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
வலது கையை மேல்நோக்கி காட்டினால் எதிரே வரும் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
வலது கையை மேலே காட்டி இடது கையை நீட்டினால் ஒரே நேரத்தில் முன்னும் பின்னும் உள்ள வாகனங்களை நிறுத்த வேண்டும்.
இடது கையை நீட்டி வலது உள்ளங்கையை கீழ்நோக்கி காட்டினால் இடமிருந்து வலது புறமாக திரும்பக்கூடிய வண்டிகளை நிறுத்த வேண்டும்.
வலது உள்ளங்கையை மேல்நோக்கி நீட்டி இடது கையை வலது பக்கம் அசைத்தால் வலப்புறம் வரும் வண்டிகளை நிறுத்தி, இடமிருந்து வரும் வண்டிகளை வலதுப்புறமாக திருப்ப வேண்டும்.
இடது உள்ளங்கை மேல்நோக்கி நீட்டி வலது கையை இடதுபுறமாக அசைத்தால் இடதுபுறத்தில் இருந்து வரும் வண்டிகளை நிறுத்தி வலமிருந்து இடப்புறமாக திருப்ப வேண்டும்.
இரண்டு கைகளையும் மேல்நோக்கி காட்டினால் நாலாப்புறமிருந்து வரும் வண்டிகளை நிறுத்த வேண்டும்.
இடதுபுறம் பார்த்து, வலது கையை மேல்நோக்கி காட்டினால் இடதுபுறம் நிற்கும் வண்டிகள் முன்னோக்கி போக வேண்டும்.
வலதுபுறம் பார்த்து, இடது கையை மேல்நோக்கி காட்டினால் வலதுபுறம் நிற்கும் வண்டிகள் முன்னோக்கி போக வேண்டும்.
வலது உள்ளங்கையை முன்புறமாக காட்டி அசைத்தால் முன் நிற்கும் வண்டிகளை முன்னோக்கி நகர்த்த வேண்டும்.