Tap to Read ➤

ட்ரூ காலருக்கு செக் வைத்த TRAI !!

TRAI அமைப்பு கொண்டுவரவுள்ள புதிய திட்டம்..!!
Sidhanathan K
பெயர் தெரியாத நபர்கள் செய்யும் போன் அழைப்புகளை பெயருடன் போன் ஸ்கிரீனில் காட்ட டிராய் ஏற்பாடு செய்துள்ளது.
தொலைபேசியை அழைக்கும் நபரின் பெயர் திரையில் தெரியும் வகையில் புதிய திட்டம் விரைவில் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய திட்டம் அமலுக்கு வரும்போது அழைப்பவரின் பெயர் நம் போனில் இல்லாவிட்டாலும் தெரிந்துவிடும்.
பயனர்களிடமிருந்து பெறப்பட்ட KYC தகவலின் அடிப்படையில், தொலைபேசி அழைப்புகளின் போது திரையில் பெயரை காணலாம்.
இதற்கான பணிகளை தொலைத்தொடர்பு நிறுவனங்களே மேற்கொள்ள வேண்டும் என்றும் டிராய் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இப்போதெல்லாம் ட்ரூ காலர் போன்ற ஆப்ஸ் மூலம் எதிரே அழைக்கும் நபரின் பெயரை தெரிந்து கொள்கிறோம்.
இந்த புதிய திட்டம் அமலுக்கு வந்தால் ட்ரூ காலர் போன்ற ஆப்கள் தேவைப்படாது.
இந்தியாவில் லட்சக்கணக்கான பயனர்கள் ட்ரூ காலர் செயலியை பயன்படுத்துகின்றனர். TrueCaller எப்படி பெயர்களை அடையாளம் காண்கிறது என்று இப்போது பார்ப்போம்.
இந்த ட்ரூ காலர் செயலியை மொபைலில் இன்ஸ்டால் செய்யும்போது, அனைத்து பயன்பாட்டிற்கும் ("Allow to Acces") அனுமதிக்கின்றோம்.
நாம் அக்சஸ் கொடுத்தவுடன் நமது மொபைல் எண், பெயர் என அனைத்து விவரங்களை அதன் சர்வரில் சேமிக்கிறது.
அதேபோல தெரியாத நபர்கள் உங்களை அழைத்தாலும், அவருடைய பெயர் மற்றும் எண் ட்ரூகாலர் டேட்டாவில் எந்த பெயரில் சேமிக்கப்பட்டுள்ளதோ அந்த பெயர் உங்கள் ஸ்கிரீனில் தோன்றும்.
இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களது போனில் சேமித்து வைத்திருக்கும் பெயர்களை தான் நமது போன் ஸ்க்ரீனில் True Caller காட்டுகிறது.