Tap to Read ➤

அபராதத்தை அதிகரித்து புதிய விதிகளை அறிவித்த போக்குவரத்துத் துறை..!!

போக்குவரத்துத் துறை உத்தரவிட்ட புதிய விதிமுறைகள்..!
Sidhanathan K
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் மோட்டார் வாகனச் சட்டம் 2019ன் கீழ் விதிமீறல்கள் தொடர்பான குற்றங்களுக்கான அபராதத் தொகையை மாற்றி அமைத்து உத்தரவிட்டுள்ளது.
புதிய போக்குவரத்து விதிகளின்படி வாகனம் ஓட்டுபவர் குடிபோதையில் இருந்தால், பின்னால் அமர்ந்திருப்பவர் மீதும் அவர் குடிபோதையில் இருந்தாரோ இல்லையோ அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டினால், அவருடன் செல்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும்.
இந்த விதிகள் பொதுமக்கள் சவாரி செல்லும் போது பின்பற்றப்படாது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
தேவையின்றி ஹார்ன் அடித்தால் ரூ.2000 அபராதம்
சாலையில் வாகன பந்தயம், சாகசங்களில் ஈடுபட்டால் ரூ.5000க்கு பதில் ரூ.10,000 அபராதம்.
காப்பீடு செய்யாத வாகனத்தை பயன்படுத்தினால் ரூ.4,000 அபராதம்.
செல்போன் பேசிக்கொண்டோ அல்லது அதிவேகமாகவோ வாகனம் ஓட்டினால் ரூ.1000க்கு பதில் ரூ.10,000 அபராதம்.
சோதனையின் போது ஓட்டுநர் உரிமத்தை தர இயலாவிட்டால் ரூ. 500க்கு பதில் ரூ.1500 அபராதம்.