சிறு குழந்தைகளுக்கு ஜலதோஷம் என்பது அடிக்கடி ஏற்படும் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சனையாகும்.
காலநிலை மாற்றம், ஈரத்தில் விளையாடுவது, தலையில் அதிகமாக வியர்வை ஏற்படுவது போன்ற காரணங்களால் ஜலதோஷம் பிடிக்கும் வாய்ப்பு அதிகமாகும்
இதனால் கண்கள் சிவப்பாகுதல், மூக்கிலிருந்து நீர் வடியுதல் தொடர் தும்மல் போன்ற அறிகுறிகள் தோன்றும் மேலும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதி அதிகரிக்கும்
இந்த பிரச்சனையை குறைக்க ஒரு எளிய வீட்டு வைத்தியம் இங்கே பார்ப்போம்
துளசி சாறு, தூதுவளைச் சாறு, தேன் மூன்றையும் சம அளவில் கலந்து, தினமும் 2 வேளைகளில் 1/4 அவுன்ஸ் கொடுத்து வந்தால், சளி மெதுவாக குறைந்து குணமாகும்
இந்த எளிய வீட்டு வைத்தியம் குழந்தைகளின் ஜலதோஷத்தை பாதுகாப்பாக குணப்படுத்த உதவுகிறது