Varalakshmi N       Jun 24, 2026

வெள்ளை முடி தொல்லையா? இதை மட்டும் செய்யுங்கள்!

AI-IMAGE

இன்றைய வாழ்க்கை முறை, மனஅழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இளம் வயதிலேயே நரை முடி தோன்றுவது அதிகரித்துள்ளது.

ரசாயன பொருட்களைப் பயன்படுத்தாமல், இயற்கையான முறையில் இளநரையை குறைக்க உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம்.

1. மருதாணி – தேயிலை டிகாஷன் பேக்: டீஸ்பூன் மருதாணி பொடியுடன்       கெட்டியான தேயிலை டிகாஷனை வடிகட்டி சேர்த்து நன்கு கலந்து, 5 மணி       நேரம் ஊற வைக்கவும்.

பின்னர் நரை உள்ள பகுதிகளில் அந்தக் கலவையைப் பூசி, 1 மணி நேரம் ஊறிய பிறகு தலையை நன்கு அலசவும்.

வாரத்தில் 2 முறை இதனை தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் இளநரை குறைய உதவும்.

2. நெல்லிக்காய் சாறும் நல்லெண்ணெயும் சம அளவில் எடுத்து நன்கு காய்ச்சி ஆறவிடவும்.

இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வந்தால், முடியின் ஆரோக்கியம்       மேம்பட்டு இளநரை வருவதைத் தாமதப்படுத்த உதவும்.

3. காய்ந்த நெல்லிக்காய், நெல்லி முள்ளி மற்றும் மருதாணி ஆகியவற்றை சம அளவில் எடுத்து நன்றாக அரைக்கவும்.

அந்தக் கலவையை இரும்பு பாத்திரத்தில் இரவு முழுவதும்       வைத்திருக்கவும். மறுநாள் அது கருமை நிறத்திற்கு மாறியிருக்கும்.

வாரத்தில் 2 முதல் 3 முறை இதை செய்து வந்தால், முடி படிப்படியாக       கருமை நிறம் பெறுவதோடு, கூந்தலும் செழிப்பாக வளர உதவும்.

இயற்கை முறைகளுக்கு உடனடி பலன் கிடைக்காவிட்டாலும், தொடர்ந்து பயன்படுத்தினால் முடியின் ஆரோக்கியம் மேம்பட்டு இளநரையை கட்டுப்படுத்த உதவும்.

சீரான உணவுமுறை மற்றும் போதுமான ஊட்டச்சத்துடன் இந்த குறிப்புகளை பின்பற்றினால் சிறந்த பலனை பெறலாம்.