Tap to Read ➤

தினமும் துளசிச் சாறு பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன ?

துளசி இலையின் மகத்தான மருத்துவ குணங்கள் !!
Sidhanathan K
துளசி, நோய் நிவாரணி மட்டுமின்றி காற்றில் உள்ள கரியமில வாயுவை உறிஞ்சி ஆக்ஸிஜனாக வெளியிடும் அற்புதமான பணியையும் செய்கிறது.
மருத்துவ குணம் கொண்ட துளசியை தினமும் உட்கொள்வதால் குடல், வயிறு மற்றும் வாய் தொடர்பான வாழ்நாள் முழுவதும் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
துளசி இலைகள் செரிமான சக்தியையும் புத்துணர்ச்சியையும் தரும் மற்றும் வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை போ‌க்கு‌ம்.
சுத்தமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் ஒரு கைப்பிடி துளசியை போட்டு 8 மணி நேரம் மூடி வைத்து அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வந்தால் எந்த நோயும் வராது.
குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடலின் வியர்வை நாற்றம் நீங்கும்.
சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.
மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது.
துளசி இலையை ஊறவைத்த தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் நம்மை நெருங்காது.
துளசி செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் இதயம் போன்ற உறுப்புகள் சீராக செயல்பட உதவுகிறது.
துளசி இலையை எலுமிச்சை சாறுடன் அரைத்து, அந்த விழுதை சருமத்தில் தடவிவர, பல நாட்களாக சருமத்தில் இருக்கும் படை, சொரி மற்றும் வெடிப்புகள் நீங்கும்.
துளசி இலை ஆட்டிசம், நரம்பு கோளாறுகள், நினைவாற்றல் குறைபாடு, இருமல் போன்ற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது.
துளசி இலைச் சாறில் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் இஞ்சி கலந்து குடித்தால் சளி, இருமல், ஆஸ்துமா போன்றவை குணமாகும்.
துளசி சாறுடன் சம அளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.
வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும்.