வழக்கமான முட்டை குழம்பிற்கு மாற்றாக, புளிப்பும் காரமும் கலந்த ஆம்லெட் புளிக்குழம்பு ஒரு வித்தியாசமான சுவையை தருகிறது
ஒரே குழம்பில் இரண்டு சுவை கொண்ட ஆம்லெட் புளிக்குழம்பு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்
தேவையான பொருட்கள்: முட்டை -3, வெங்காயம் -5, பச்சை மிளகாய் -2, மிளகாய் வற்றல் -5, சீரகம் -1 தேக்கரண்டி, புளி சிறிய நெல்லிக்காயளவு, மஞ்சள்தூள் -1/2 தேக்கரண்டி, நெல்லெண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு
செய்முறை: வெங்காயம், பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். மிளகாய் வற்றல் சீரகம் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். புளியை ஊறவைத்து கரைத்து வைத்துக்கொள்ளவும்
வழக்கமான முறையில் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து ஆம்லெட்டை தயார் செய்துகொள்ளவும். பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி புளிக்கரைசலை சேர்க்கவும். குழம்பு சற்று கெட்டியாகும் போது நறுக்கிய ஆம்லெட் துண்டுகளை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்
புளிப்பும் காரமும் கலந்து இந்த ஆம்லெட் புளிக்குழம்பு, சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்