நெத்திலி மீன்: உடல் சூட்டை தணித்துச் சமப்படுத்தும், அதிகம் சாப்பிட்டால் வாயுவை உண்டு பண்ணும், வயிற்று உப்பிசம், சில சமயங்களில் வயிற்றுப் போக்கையும் உண்டு பண்ணும்
போறாறால் மீன்: மலச்சிக்கல் நிவர்த்தியாகும். எல்லா வியாதிகளும் குணமாகும்
திருக்கை மீன்: ரத்தத்தை விருத்தியாகும், தாதுவை பலப்படுத்தும். பித்தம், வாத சம்பந்தமான வியதிகளை அதிகரிக்க செய்யும்
கொண்டை மீன்: உடலிலுள்ள எந்த வகையான வியாதிகளையும் தூக்கிவிடும். குன்ம நோயை அதிகப்படுத்தும்
கெளிற்று மீன்: உடல் உஷ்ணத்தைத் சமப்படுத்தும். உடலுக்கு நல்ல பலம் தரும், சிறிதளவு வாயுவை உண்டுபண்ணும்
மடவை மீன்: பசியை மந்தப்படுத்தும், சொரி, சிரங்கு மற்றும் இரணத்தை மேலும் அதிகரிக்க செய்யும், மூல வியாதியை உண்டு பண்ணும்
வஞ்சிர மீன்: உடலுக்கு நல்ல பலம் தரும், உடல் உஷ்ணத்தை உண்டு பண்ணும், கெடுதல் ஏதும் செய்யாது