ஆல்பக்கோடா பழம் இதை சாப்பிட்டால் சுர வேகத்தை தணிக்கும், சொறி, சிரங்கு நீங்கும், தலைவலி குணமாகும்
இலந்தைப் பழம், இதை சாப்பிட்டால் நாவிற்கு ருசியறியும் உணர்ச்சியை தரும், வாந்தி நிற்கும், வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வலி மற்றும் எரிச்சல் உண்டு பண்ணும்
ஈச்சம் பழம், உடலுக்கு அதிக உஷ்ணத்தை தரும், நீரழிவை தணிக்கும், ரத்தத்தை விருத்தி பண்ணும், பித்த சம்பந்தமான வியாதிகளை குணப்படுத்தும்
கரு வாழைப்பழம், இதை சாப்பிட்டால் வாத சம்பந்தமான வியாதிகள் மேலும் அதிகரிக்கும்
களாப்பழம், உடல் உஷ்ணத்தை தணிக்கும், தொண்டை வலி குணமாகும், நல்ல ஜீரண சக்தியை உண்டு பண்ணும்
கேந்திர வாழைப்பழம், அதிகம் சாப்பிட்டால் சீதளத்தை உண்டு பண்ணும், ரத்தத்தை விருத்தி செய்து உடலுக்கு நல்ல பலத்தை தரும்