Tap to Read ➤

UIDAI அறிமுகப்படுத்திய லொகேஷன் டிராக் எனும் புதிய வசதி..!!

அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தின் லொகேஷனை எவ்வாறு கண்டுபிடிப்பது?
Sidhanathan K
ஆதார் வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது இருப்பிடம் கண்காணிக்கும் லொகேஷன் ட்ரேக் வசதியை அமைக்க இஸ்ரோவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
அதற்கு, புவன் ஆதார் போர்டல் மூலம் ஆதார் மையத்தை அடைவதற்கான வழி, ஆதார் மையத்தின் தொலைவு மற்றும் ஆதார் மையத்தின் அனைத்து தகவல்களையும் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.
ஆதார் சேவை மையத்தின் இருப்பிடத்தை கண்டறிவதற்கு முதலில் https://bhuvan.nrsc.gov.in/aadhaar/ க்குச் செல்ல வேண்டும்.
Go to the link
பின் அருகிலுள்ள ஆதார் மையம் பற்றிய தகவலை பெற, சென்டர் நியர்பை (Centre Nearby) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
அந்த பக்கத்தில் ஆதார் மையம் இருக்கும் இடம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இது தவிர Search by Aadhaar Seva Kendra அப்சனுக்குச் சென்றும் தகவலை பெறலாம்.
அதில் ஆதார் மையத்தின் பெயரை உள்ளிட்டவுடன் ஆதார் மையத்தின் தகவல்கள் டிஸ்பிலே செய்யப்படும்.
இது போக பின் கோடு (Search by PIN Code) ஆப்சனின் மூலம் சுற்றியுள்ள ஆதார் மையத்தைப் பற்றிய தகவல்களையும் பெறமுடியும்.
மாநில வாரியான ஆதார் சேவா கேந்திரா (State-wise Aadhaar Seva Kendra) ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் மாநிலத்தில் உள்ள அனைத்து ஆதார் மையங்களின் தகவலைப் பெறலாம்.