Tap to Read ➤

உக்ரைன் ரஷ்யா போர்! பதற வைக்கும் போட்டோஸ்

உக்ரைன் ரஷ்யா போரில் என்ன நடக்கிறது? இதுதான் நிலைமை!
உக்ரைனில் இருந்து போர் காரணமாக பல லட்சம் பேர் வெளியாகி வருகிறார்கள். மெடிக்கயா போலந்து பார்டரில் பல லட்சம் பேர் இதனால் வரிசையில் நின்று வருகிறார்கள்.
உக்ரைனின் இர்பின் பகுதியில் இருந்து பலர் வெளியேறி வருகிறார்கள். இது கீவ் வெளியே உள்ள பார்டர் பகுதி ஆகும். இங்கிருந்து பெண் ஒருவரை ராணுவ வீரர் சுமந்தபடி வெளியேற்றி வருகிறார்.
உக்ரைனில் கார்கிவ் பகுதியில் ரஷ்ய படைகள் ராக்கெட் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் சிதிலம் அடைந்த நபர் ஒருவரின் அதிர்ச்சி தரும் புகைபடம்.
போருக்கு இடையே பூத்த காதல்: உக்ரைன் வீரர் லேசியா இவான்ஸ்க்கோ மற்றும் வீராங்கனை வலேரி பிளைலிமோனோவ் இடையே போருக்கு மத்தியில் திருமணம் நடந்தது.
சீனா இந்த போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக உள்ளது. இதனால் சீனர்கள் பலர் உக்ரைனில் இருந்து வேகமாக வெளியேறி வருகிறார்கள்.
உக்ரைன் வீரர்கள் தலைநகர் கீவில் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு வெளியே 60 கிமீ தூரத்திற்கு ரஷ்ய படைகள் அணி வகுத்து நிற்கின்றன.
உக்ரைனில் சிறை பிடிக்கப்பட்ட ரஷ்ய வீரர்கள் மீடியா முன் பேட்டி அளிக்கும் பரபரப்பு காட்சிகள்.
உக்ரைனில் கீவ் பகுதியில் வெடிக்க வைக்கப்பட்ட பாலம் ஒன்றுக்கு கீழ் உக்ரைன் மக்கள் பாதுகாப்பிற்காக காத்திருக்கும் காட்சிகள்.
உக்ரைனில் இர்பின் மிகுந்த சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இங்கு உள்ள பாலம் ஒன்று ரஷ்ய படைகள் தாக்கப்பட்ட நிலையில் 12 பேர் அங்கு பலியானார்கள்.