Tap to Read ➤

இசைஞானி இளையராஜாவின் சிறப்பு அம்சங்கள்

திரையிசையமைப்பாளர், இசையமைப்பாளர், கவிஞர், பாடகர்
இவர் இசையமைப்பாளர், பாடகர், கிட்டார், கீபோட்/ ஆர்மோனியம்/ பியானோ இசைக்கலைஞர்
இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன்படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர்
பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் Classical guitar (Higher Local) தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்
இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு, இந்திய அரசின் படத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான, பத்ம பூஷண் விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது
இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது, 25 ஜனவரி2018 அன்று, இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது
தமிழக நாட்டுப்புற இசை, கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில், புலமையும், முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார்
இளையராஜாவின் இயற்பெயர் "ராசய்யா" என்பதாகும். தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் பிறந்தார்
1969 ஆம் ஆண்டு தன் 26ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார்
1975 ஆம் ஆண்டில் அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து எஸ். ஜானகி பாடிய "மச்சானைப் பாத்தீங்களா.." என்ற பாடல் மிகப் பிரபலமானது
இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற 1996 உலக அழகி அழகுப் போட்டி போன்ற நிகழ்வுகளுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்
கோவிட்-19 பெருந்தொற்றுகளுக்கு மத்தியில் பணியாற்றி வரும் காவலர்கள், ராணுவம், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவலாளிகள் போன்றவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக 2020 மே மாதம் அவர் 'பாரத் பூமி' என்ற தலைப்பில் ஒரு பாடலை இயற்றினார்.