Tap to Read ➤

டைட்டானிக் கப்பல் பற்றிய சில சுவாரசிய தகவல்கள்!

காதலின் சின்னம் டைட்டானிக் கப்பல்!
varalakshmi n
ஆர்எம்எஸ் டைட்டானிக் (RMS Titanic) என்பது ஒரு ஆடம்பர பயணிகளின் கப்பல்
இது வட அயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது,1912 இல் முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது இதுவே உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும்
டைட்டானிக் தனது முதற் பயணத்தின் போது ஏப்ரல் 14, 1912 இல் இரவு 11:40 மணிக்கு வட அட்லாண்ட்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது; மோதி 2 மணி 40 நிமிடங்களில் ஏப்ரல் 15, 1912 இல் முற்றாக மூழ்கியது,சரியாக அதிகாலை 2:20 மணிக்கு கப்பல் முற்றாக மூழ்கியது
டைட்டானிக் கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 1503 பேர் கொல்லப்பட்ட நிகழ்வு அமைதிக்காலத்தில் நடந்த மிகப்பெரும் கடல் அழிவாகக் கருதப்பட்டது
கப்பலின் சேதமடைந்த பகுதிகளை செப்டம்பர் 1, 1985 இல் ரொபேர்ட் பலார்ட் தலைமையிலான ஆய்வாளர் குழு ஒன்று கண்டு பிடித்தது
டைடானிக் கப்பல் இப்போது கடல் மட்டத்திலிருந்து 12,000 அடி ஆழத்தில் இருக்கின்றது. இவ்வாழத்தின் நீரின் அழுத்தம் ஒரு சதுர அங்குலத்திற்கு 6000 இறாத்தல் (2700 கிகி) ஆக உள்ளது
டைட்டானிக் மூன்று வகுப்புக்களைக் கொண்டிருந்தது. மூன்றாவது கீழ் வகுப்பில் பொதுவாக அமெரிக்காவில் குடியேறுவதற்காக சென்றவர்களே அதிகமாக இருந்தனர். முதல் வகுப்பில் பல புகழ்பெற்ற கோடீசுவரர்கள் சென்றனர்
மொத்தம் இருந்த 2,223 பேரில், 706 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். 1,517 பேர் உயிரிழந்தனர், இவர்களில் பெரும்பாலானோர் கடலில் 28 °F (-2 °C) குளிர் தாங்காமையினால் உயிரிழந்தனர்