நம் அன்றாட வாழ்க்கையில் ஆரோக்கியம், அழகு மற்றும் வீட்டு பராமரிப்புக்கு உதவும் சில எளிய குறிப்புகள் இவை
முகத்தில் ஏற்படும் சுருக்கம் நீங்க, சில துளி நல்லெண்ணெயோடு சமளவு நீர் துளிகளை கலந்து குழைத்தால் நுரை வரும். அதை முகத்தில் சுருக்கம் உள்ள இடத்தில் உரசி தேய்த்து வந்தால் சுருக்கம் நீங்கி முகம் பளபளப்பாகும்
காலையில் பல் துலக்கும்போது பிரஷ்ஷில் பேஸ்ட் எடுத்து அதில் சிறிது உப்பை தூவி பற்களை தேய்த்தால் பற்களிடையே உள்ள கிருமிகள் அழியும், பற்கள் பளிச்சென்று இருக்கும்
கேஸ் அடுப்பு மற்றும் அதன் டியூபை சோப்பு தண்ணீர் கொண்டு துடைத்தால் சுத்தமாக இருக்கும்
எவ்வளவு காய்கறி, பழங்கள் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், இரவில் கடுக்காய் பொடியை 2 சிட்டிகை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும்
தொடர்ந்து முட்டைகோஸ் சாப்பிடுவதால் ஜலதோஷம் பிடிக்காது, நெஞ்சுவலி வராது
ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் இவற்றை சம அளவு கலந்து உடம்பில் பூசி 1 மணி வரை ஊறிய பின் குளித்தால் தோலில் உள்ள சுருக்கங்கள், மரு நீங்கிவிடும்
இந்தப் பயனுள்ள குறிப்புகள் உங்களுக்கு உதவியாக இருந்தால் உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிருங்கள். ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வாழ்த்துகள்!