Tap to Read ➤

வந்தே பாரத் விரைவு ரெயிலின் சிறப்பம்சங்கள் .!!

வெற்றிகரமாக இயக்கப்பட்ட இந்தியாவின் 3வது வந்தே பாரத் ரயில் !!
Sidhanathan K
இந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 2018 இல் உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் நடந்த சோதனை ஓட்டத்தில் வெற்றி கண்டது. அதனால்தான் இந்த ரயிலுக்கு ரயில்-18 என்று பெயர் வந்தது.
இதற்கு முன்பு டெல்லி - வாரணாசி, டெல்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையே 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவை துவங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது குஜராத் மாநிலம் காந்தி நகரில் இருந்து மும்பை சென்ட்ரல் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
வந்தே பாரத் 2.0 என்று அழைக்கப்படும் இந்த ரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள இன்டக்ரல் கோச் பேக்டரி (ICF)யில் தயாரிக்கப்பட்டது.
இந்த ரயில் 129 வினாடிகளில் 160 கிமீ வேகத்தை எட்டும். மேலும் இது மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும்.
இந்தியாவின் முதல் எஞ்சின் இல்லாத இந்த ரயில் 750 கி.மீ தூரத்தை சுமார் 8 மணி நேரத்தில் கடக்கும்.
இந்த ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, இன்னும் ஓராண்டில் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்போவதாக திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக உள்ள வந்தே பாரத் ரயில்கள் 100 கிமீ வேகத்தை எட்ட 54.6 வினாடிகள் எடுத்தது. இந்த ரயில் அந்த வேகத்தை 52 வினாடிகளில் எட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ரயிலின் எடை 392 டன். இது முந்தைய ரயில்களை விட 38 டன் எடை குறைவானது.
ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள் உள்ளன. அவற்றில் 2 எக்சிகியூட்டிவ் கோச்சுகள் மற்றும் மீதமுள்ள 14 பெட்டிகள் எகானமி கோச்சுகள்.
இந்த ரயிலின் எக்ஸிகியூட்டிவ் கோச்சுகளில் உள்ள இருக்கைகளை 180 டிகிரியில் சுழற்ற முடியும்.
பயண தொகையாக, சாதாரண இருக்கைக்கு (Economic Coach)-ரூ. 1,755 மற்றும் நிர்வாகிகள் இருக்கைக்கு (Executive Coach)-ரூ. 3,300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, இந்த ரயிலில் ஏர் கண்டிஷனிங் (ஏசி), வைஃபை, ஜிபிஎஸ், தானியங்கி கதவுகள் மற்றும் 32 இன்ச் எல்சிடி டிவி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
இந்த ரயிலில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் செல்லும் வகையில் படிக்கட்டுகள் மற்றும் நவீன கழிப்பறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சர்வதேச விமானங்களின் வசதிகள் போன்று அமைந்துள்ள இந்த ரயில் 18 மாதங்களில் தயார் செய்யப்பட்டது.