Varalakshmi N       Feb 20, 2025

கருவாடு வகைகளும் அதன் மருத்துவ பலன்களும்..!

அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு என்றால் அது மீன் மற்றும் கருவாடு தான்

சிலவகை கருவடுகளின் மருத்துவ பலன்களை பற்றி இங்கு பார்ப்போம்

ஓலை வாளைக் கருவாடு: இதை சாப்பிட்டால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும், பித்தம் மற்றும் வாதம் சம்பந்தமான வியாதிகளை குணப்படுத்தும்

கொடுவா கருவாடு: இதில் 4 மடங்கு புரதச்சத்து உள்ளது, இதை உட்கொண்டு வந்தால்  இரத்த சோகை, உடல் பெலவீனம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு நீங்கும்

சுறா கருவாடு: வாத நோயை கட்டுப்படுத்தும், வயிற்று வலியை போக்கும், குடல்  பூச்சிகள் வெளியேறும், தாய்ப்பால் பெருக்கத்துக்கும், பசியை நன்கு  தூண்டும், உண்ட உணவு சீக்கிரம் ஜீரணம் ஆகிவிடும்

சிலா கருவாடு: வஞ்சீரமீன் கருவாட்டுக்கு நிகராக இந்த சிலா கருவாடு  இருக்கும். குறைந்த அளவு கருவாட்டில் அதிக கலோரி கொண்டுள்ளது. உடலுக்கு  அதிக ஆற்றலை தரக்கூடியது சிலா கருவாடு