Varalakshmi N       Mar 26, 2025

அதிக மருத்துவ குணம் கொண்ட நன்னாரியின் பல்வேறு பயன்கள்..!

நன்னாரி வேர் ஒரு நறுமணம் தரும் பொருள், அதிக மருத்துவ குணங்களும் கொண்டது

உடலில் வெப்பத்தை தணிக்கும், சிறுநீர் நன்றாக பிரிய, முக்கியமாக பால்வினை நோய்க்கு நல்ல மருந்து

இதன் வேரை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் எய்ட்ஸ் நோயிலிருந்து தப்பலாம்

பச்சை நன்னாரி வேர் 5 கிராம் அளவு எடுத்து நன்கு அரைத்து 3/4 பாலில் கலந்து  சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு, மூலச்சூடு, வறட்டு இருமல் ஆகியவை  தீரும்

வேரை இடித்து நீரில் ஊறவைத்து, மறுநாள் காலை வடிகட்டி காலை மாலை குடித்துவர நீரழிவு, சொறி, சிரங்கு மேக நோய் குணமாகும், ஆனால் பத்தியம் மிகவும் அவசியம்

பெரு நன்னாரி கிழங்கு ஊறுகாய் செய்து சாப்பிட கல்லீரலை குணப்படுத்தும், மஞ்சள் காமாலை குணமாகும்

இதன் வேரை மெல்லிய துணியில் கட்டி பானையில் போட்டு அந்த நீரை குடித்து வந்தால் கோடை காலத்தில் வறட்சியை தணித்து, உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கும்