Tap to Read ➤

லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கிய வாகனக் கண்காட்சி!

லாஸ் ஏஞ்சல்ஸ் வாகன கண்காட்சி உலகப் புகழ்பெற்றதாகும்.
HTML Tamil
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கார் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்
அதன்படி, இந்த ஆண்டுக்கான உலகப் புகழ்பெற்ற கார் கண்காட்சி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கியுள்ளது.
உலக அளவில் மிகவும் செல்வாக்கு மிக்க வாகனக் கண்காட்சியில் ஒன்றாக லாஸ் ஏஞ்சல்ஸ் கார் கண்காட்சி கருதப்படுகிறது.
கன்வென்ஷன் சென்டரில் தொடங்கியுள்ள இந்த ஆண்டுக்கான வாகனக் கண்காட்சி, வரும் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தக் கார் கண்காட்சியில், 30-க்கும் மேற்பட்ட முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
பிரபல வாகன தயாரிப்பு நிறுவனங்கள், தாங்கள் தயாரித்துள்ள புதிய வகை கார்களை, இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளன.
இந்த பிரம்மாண்ட கார் கண்காட்சிக்கு, ஆயிரக்கணக்கான வாகனப் பிரியர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் வாகன கண்காட்சி, 1907-ம் ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்டது. இதில், 99 வாகனங்கள் பங்கேற்றன.
கடந்த 1929-ம் ஆண்டு கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது.
2006-ம் ஆண்டு வரை ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டு வந்த இந்தக் கண்காட்சி, பின்னர் நவம்பர் - டிசம்பர் மாதங்களுக்கு மாற்றப்பட்டது.