கோடை காலம் வந்தாலே குடும்பத்துடன், நண்பர்களுடன் மனதை குளிர்விக்கும் இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் வரும்.
இயற்கை அழகு, குளிர்ந்த காலநிலை, அருவிகள், மலைப்பகுதுகள் என மனதை புத்துணர்ச்சி பெறச் செய்யும் இடங்களை இந்த கோடையில் கண்டிப்பாக ரசிக்கலாம்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் எளிதாக செல்லக்கூடிய சில அழகான சுற்றுலா தலங்கள் உள்ளன.
1. மலைகளின் இளவரசி- குளிர்ந்த காலநிலை, பசுமை சூழ்ந்த மலைகள், ஏரிகள், அமைதியான சூழல் காரணமாக கோடைக்கானலில் கோக்கர்ஸ் வாக், பில்லர் ராக்ஸ், பிரையன்ட் பூங்கா மிகவும் பிரபலமான இடமாகும். குடும்ப சுற்றுலாவிற்கு சிறந்த தேர்வு.
2. நீலகிரியின் சொர்க்கம்- ஊட்டி ஏரி,மலை ரயில் பயணம், தேயிலை தோட்டங்கள், தாவரவியல் பூங்கா, டொடபெட்டா சிகரம், பைன் காடு, ஆகியவை குறைந்த செலவில் ரசிக்கக்கூடிய அழகான ஹில் ஸ்டேஷன்.
3. ஏற்காடு – குடும்பத்துடன் செல்ல ஏற்ற அமைதியான மலையகம். அழகிய ஏரி, மனதை கவரும் பாகோடா பாயிண்ட், இயற்கை எழில் சூழ்ந்த கில்லியூர் அருவி போன்ற சுற்றுலா தலங்கள் பயணிகளை பெரிதும் ஈர்க்கின்றன.
5. வால்பாறை – இயற்கையின் சொர்க்கம், அலியார் அணைநீரார், அணைதேயிலை தோட்டங்கள், குரங்கு அருவி, அமைதியான சாலை பயணம், தேயிலை தோட்டங்கள், பசுமை நிறைந்த காட்சிகள் ஆகியவற்றால் மனதை கவரும் இடம்.
6. மேகமலை – மேகங்கள் மிதக்கும் மலைப்பகுதி, மேகமூட்டமான மலைப்பாதைகள், அழகிய சூரிய உதயம், இயற்கை நடைபயணம், கூட்டம் குறைவாக அமைதியாக ஓய்வு எடுக்க ஏற்றது. இயற்கையை நேசிப்பவர்களுக்கு சிறந்த இடம். .
அதிக செலவு இல்லாமல் குடும்பத்துடன் நினைவாக இருக்கும் பயணத்தை திட்டமிட இந்த கோடையில் ஒரு அழகான பயணத்தை ஆரம்பியுங்கள்!