Tap to Read ➤

மூளையில் டோபமைன் அளவை அதிகரிக்க சில வழிகள்

இயற்கையாகவே டோபமைன் அளவை அதிகரிக்க 10 வழிகள்
Sidhanathan K
டோபமைன் என்பது மூளையில் உற்பத்தி செய்யப்படும் ஒரு நரம்பியக்கடத்தி ஆகும், இது நினைவகம், இயக்கம், உந்துதல், மனநிலை, கவனம் மற்றும் பல உடல் செயல்பாடுகளில் பங்கு வகிக்கிறது.
வான்கோழி, மாட்டிறைச்சி, முட்டை, சோயா மற்றும் பருப்பு வகைகள் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல்.
வெண்ணெய், பால், பாமாயில் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைவாக உட்கொள்ளுதல்.
தயிர், மோர் போன்ற புரோபயாட்டிக் உணவுகளை எடுத்து கொள்வது.
பூனைக்காலி எனும் வெல்வெட் பீன்ஸ் உணவில் அதிகாமாக எடுத்து கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி மனநிலையை மேம்படுத்தலாம் மற்றும் தவறாமல் செய்யும்போது டோபமைன் அளவை அதிகரிக்கலாம்.
ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்கி விழிப்பதன் மூலம் டோபமைன் அளவை அதிகப்படுத்தலாம்.
மனதிற்கு பிடித்த பாடலை கேட்கும்போது டோபமைன் அளவு அதிகரிக்கிறது.
1 மணி நேர தியானத்தின் மூலம் டோபமைன் அளவை 65% அதிகரிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சூரிய ஒளி டோபமைன் அளவை அதிகரிக்கிறது மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது.
இரும்புச் சத்து, நியாசின், ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி6 குறைபாடுகளைக் கண்டறிந்து ரத்தப் பரிசோதனை மூலம் சரி செய்ய வேண்டும்.