Tap to Read ➤

விநோதமாக படைக்கப்பட்ட கின்னஸ் சாதனைகள்!

விநோத திறமைகளை கின்னஸ் சாதனை அமைப்பு தொடர்ந்து அங்கீகரித்து வருகிறது
HTML Tamil
சாதனை படைக்க துடிக்கும் நபர்கள், அதற்காக விடா முயற்சியிலும், தொடர் பயிற்சிகளிலும் ஈடுபட்டு, சாதித்து காட்டி விடுகிறார்கள்.
அந்த வகையில், அமெரிக்காவின் டேவிட் ரஷ் என்பவர், 150 எரியும் மெழுகுவர்த்திகளை வாயில் வைத்த கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் ஐடாஹோவைச் சேர்ந்த டேவிட் ரஷ், தனது வாயில் 150 மெழுகுவர்த்திகளை வாயில் அடக்கிக் கொண்டார்.
பின்னர் மெழுகுவர்த்திகளை பற்ற வைத்து, 30 வினாடிகளுக்கு, எரியும் மெழுகுவர்த்திகளை வாயில் அடக்கி, இந்த சாதனையை படைத்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் அந்நாட்டைச் சேர்ந்த காரெட் ஜேம்ஸ் என்பவர் 105 எரியும் மெழுகுவர்த்திகளை வாயிலை அடைத்து சாதனை படைத்திருந்தார்.
அந்த சாதனையை தற்போது டேவிட் ரஷ் முறியடித்து, புதிய கின்னஸ் சாதனை படைத்து அசத்தியுள்ளார்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த சிட்னி டி கார்வாலோ என்பவர், கண் விழிகளை வெளியே கொண்டு வந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
தனது கண் இமைகளை விட்டு 18.2 மில்லி மீட்டர் வரை கண் விழிகளை வெளியே கொண்டு வந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
20 முதல் 30 விநாடிகள் வரை, கண் விழிகளை வெளியே கொண்டு வந்தபோது, அவரது முகம் காண்போரை மிரள வைத்தது.
சிறு வயதில் வேடிக்கையாக செய்து காண்பித்த டி கார்வாலோவின் செயல், தற்போது கின்னஸ் சாதனை படைக்க வைத்துள்ளது.