Tap to Read ➤

எலும்புகளுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் என்னென்ன?

ஆரோக்கியமான உணவுகள் மூலம்  எலும்புகளை வலுப்படுத்தலாம்.
HTML Tamil
உடலின் அஸ்திவாரமான எலும்புகள், நாம் நிற்க, அமர, நடக்க, ஓட என அனைத்து செயல்களையும் செய்கிறது.
இத்தகைய செயல்களை செய்யும் எலும்புகள், உறுதியாகவும், வலுவாகவும் இருப்பது மிகவும் அவசியமாகும்.
ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொண்டால் உடலில் உள்ள எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்ள முடியும்.
முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பீட்ரூட் போன்ற காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வெந்தயக் கீரை, முருங்கை, கொத்தமல்லி, முள்ளங்கிக்கீரை உள்ளிட்ட கீரைகளில் கால்சியம் உள்ளதால் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
ஆரஞ்சு, கொய்யா, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், ஆப்பிள் போன்ற பழங்களை உண்டால் எலும்புகள் வலுப்பெறும்.
கால்சியம், மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த பேரீச்சம் பழத்தை சாப்பிட்டதால் எலும்புகள் ஆரோக்கியதாக இருக்கும்.
தினமும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். பாலில் கால்சியம், வைட்டமின்டி, மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
திராட்சை பழத்தில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளதால் எலும்புகள் தேய்மானம் ஆகாமல் பாதுகாக்கும்.
அதிக அளவில் புரோட்டீன் சத்துள்ள முட்டையை உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.
சோயா பீன்ஸ், உலர்ந்த பழங்கள், மீன் உள்ளிட்டவையும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெற்று ஆரோக்கியமாக இருக்கலாம்.
தினமும் காலை மற்றம் மாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டால், உடலில் உள்ள எலும்புகள் உறுதியுடனும், வலுவாகவும் இருக்கும்.