Tap to Read ➤

சைவ உணவு பிரியர்களுக்கான புரோட்டீன் உணவுகள் என்னென்ன?

உடல் உறுதியாக இருக்க புரதச்சத்து அவசியமாகும்.
HTML Tamil
உடலின் தசைகள் வலுவாக இருக்கவும், நோய் நொடிகள் தாக்காமல் இருக்கவும் உடலுக்கு புரோட்டீன் சத்துக்கள் தேவைப்படுகிறது.
புரோட்டீன்கள் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்ற செயல்பாட்டிற்கு உதவுகிறது. புரோட்டீன்கள் தொற்று நோயையும் தடுக்கிறது.
சைவ உணவு பிரியர்களுக்கான புரோட்டீன் சத்து, எந்தெந்த உணவுகளில் அதிகமாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
கீரை

புரதம், கனிமம், வைட்டமின் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ள கீரை வகைகளை, உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சோயா பீன்ஸ்
 
அசைவ உணவுகளுக்கு இணையான புரதச்சத்து சோயா பீன்சில் நிறைந்துள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
முளைகட்டிய பயிர்

முளைகட்டிய பயிர் வகைகள், சிறுதானியங்களில் போதுமான புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
பருப்பு வகைகள்

துவரம் பருப்பு, பாசி பருப்பு என பருப்பு வகைகளிலும் புரதச்சத்துகள் நிறைந்துள்ளன.
பச்சைப் பட்டாணி

பச்சைப் பட்டாணியை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால், உடலுக்குத் தேவையான புரோட்டீன் கிடைக்கும்.
நட்ஸ்கள்

பிஸ்தா மற்றும் பாதாம் பருப்பு போன்றவற்றை தினமும் சாப்பிட்டால் புரோட்டீன் சத்து கிடைக்கும்.

பன்னீர்

பால் பொருளான பன்னீரில் புரோட்டீன் நிறைந்து காணப்படுகிறது. சப்பாத்தி மற்றும் பூரியுடன் பன்னீரை சேர்த்து சாப்பிடலாம்.
பால்

பாலில் புரதச்சத்து மட்டுமின்றி கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது. ஓட்ஸ்-ஐ பாலில் கலந்து காலை மற்றும் மாலையில் சாப்பிடலாம்.
கொண்டைக்கடலை

நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின்கள் நிறைந்த கொண்டைக் கடலையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.