Tap to Read ➤

அதிசய மூலிகைகளின் அற்புத நற்பயன்கள் என்னென்ன?

நோய்களை குணமாக்கும் தன்மை மூலிகைகளுக்கு உண்டு.
HTML Tamil
மூலிகை பொடிகள், எந்தெந்த நோய்களை குணமாக்க பயன்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
கடுக்காய் பொடி

குடல் புண் ஆற்ற சிறந்த மருந்தாகும். மலச்சிக்கலையும் போக்குகிறது.
ஜாதிக்காய் பொடி

நரம்பு தளர்ச்சியை போக்குகிறது. ஆண்மை சக்தி பெருகவும் உதவுகிறது.
அதிமதுரம் பொடி

தொண்டை கரகரப்பு, வரட்டு இருமலை நீக்கவும், குரல் வளம் பெறவும் உதவுகிறது.
திப்பிலி பொடி

 உடல் வலி, அலுப்பு, சளி, இருமல் நோயை குணப்படுத்துகிறது.
திரிபலா பொடி

வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. அல்சரையும் கட்டுப்படுத்தும்.
வில்வம் பொடி

உடலில் உள்ள அதிகபடியான கொழுப்பை குறைக்கும். ரத்த கொதிப்பிற்கு சிறந்த மூலிகையாகும்.
கரிசலாங்கண்ணி

பொடி காமாலை மற்றும் ஈரல் நோயை குணமாக்கிறது. கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்த மூலிகையாகும்.
சிறியா நங்கை பொடி

அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் அரும்பெரும் மூலிகையாக உள்ளது.
முடக்கத்தான் பொடி

மூட்டு வலி, முழங்கால்வலி, வாத நோய்களை குணமாக்கும்.
நாயுருவி பொடி

அனைத்து மூல நோய்களையும் குணமாக்கும் சிறந்த மூலிகையாகும்.
வாதநாராயணன் பொடி

பக்கவாதம், கை, கால்கள் மூட்டு வலியை குணமாக்கும்.
சித்தரத்தை பொடி

சளி, இருமல், வாயு கோளாறுகளை சரி செய்யும் மூலிகையாகும்.
சிறுகுறிஞ்சான் பொடி

சர்க்கரை நோய்க்கு, மிகச் சிறந்த மூலிகையாக விளங்குகிறது.