Tap to Read ➤

ஏலக்காயில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் என்னென்ன?

ஏலக்காயை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.
HTML Tamil
சமையலில் பயன்படுத்தப்படும் ஏலக்காயில் பல அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதன் வாசனை மனதை சாந்தமடைய செய்ய உதவுகிறது.
ஏலக்காயை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உயர் ரத்த அழுத்த பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். ஏலக்காய் ரத்தத்தையும் சுத்திகரிக்க உதவுகிறது.
இரவு தூங்குவதற்கு முன்பாக 3 ஏலக்காயை மென்று, தண்ணீர் குடித்தால், மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
வயிற்றில் ஏற்படும் அல்சர், வாயு சம்பந்தமான கோளாறுகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு, ஏலக்காய் நல்ல மருந்தாக இருக்கிறது.
ஏலக்காயை இரவில் மென்று சாப்பிட்டால், தூக்கமின்மை, குறட்டை போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.
உடலில் தாங்க முடியாத வலி ஏற்படும் சமயங்களில், ஒன்றிரண்டு ஏலக்காய்களை வாயில் போட்டு மென்றால், உடல் வலி குணமாகும்.
சர்க்கரை நோயாளிகள் குடிக்கும் தேனீரில், ஏலக்காய் பொடியை சிறிது சேர்த்து கொண்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள், பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் திறன் கொண்டதால், இதனை சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
சைனஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஏலக்காய் நல்ல மருந்தாக திகழ்கிறது. ஏலக்காயை சாப்பிட்டால் சைனஸ் பிரச்சனை சரியாகும்.
ஆஸ்துமா மற்றும் வீசிங் பிரச்சினை கொண்டவர்கள், அதற்குரிய மருந்துகளுடன் ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
ஏலக்காய் எண்ணெய்யை முகத்தில் தடவி வந்தால், சருமத்தில் உள்ள துளைகள் மறைந்து, சருமம் பொலிவுடன் மாறும்.