Tap to Read ➤

பூண்டு பால் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

பூண்டு பால் குடித்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கு
HTML Tamil
பூண்டு பால் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் சில பூண்டு பற்களைத் தட்டிப் போட்டு நன்கு வேக வைக்க வேண்டும்.
பூண்டு நன்கு வெந்ததும், பனங்கற்கண்டு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து, பூண்டை மசிக்க வேண்டும்.
பூண்டு பாலை குடித்தால் சளி மற்றும் காய்ச்சல் பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடலாம்.
முகப்பரு பிரச்சனைகள் வராமல் தடுக்க, பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவி, கழுவ வேண்டும். பூண்டு பாலையும் குடித்து வரலாம்.
இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வு பிடிப்பு மற்றும் கால் வலி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், பூண்டை பாலை குடித்தால் குணமாகும்.
பூண்டு கலந்த பால், உடல் பருமனைக் குறைத்து, இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கிறது.
ரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனையை குணமாக்குகிறது.
மலேரியா, காசநோய், யானைக்கால் போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராக பூண்டு பால் செயல்படுகிறது.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும், குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும்.
பூண்டு பால், உணவுகளை ஜீரணமாக்க உதவுகிறது. செரிமான திரவத்தை தூண்டி எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது.
பூண்டு கலந்த பாலை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம்.
பூண்டு பால், ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்க செய்கிறது. புற்று நோய் வருவதை தடுகிறது.