Tap to Read ➤

சுண்டைக் காய் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

அளவில் சிறியதாக இருக்கும் சுண்டைக்காய் மருத்துவ குணம் கொண்டது.
HTML Tamil
வைட்டமின் பி மற்றும் சி சத்துக்கள் நிறைந்திருக்கும் சுண்டைக்காயின் மருத்துவ குணங்களையும், பயன்களையும் தெரிந்துகொள்வோம்.
சுண்டைக்காயை உணவில் சேர்த்து சாப்பிடுவதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது.
சுண்டைக்காய் உடலில் காணப்படும் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்பெறச் செய்கிறது.
சுண்டைக்காயில் உள்ள இரும்புச் சத்து, உடலில் ஏற்படும் ரத்த சோகையை சரி செய்ய உதவுகிறது.
வயிற்றில் வளரும் புழுக்களை வெளியேற்றி, வயிற்றையும், குடலையும் சுத்தப்படுத்த சுண்டைக்காய் பெரிதும் பயன்படுகிறது.
நரம்பு தொகுதிக்கு வலுபெற சக்தி வழங்கி, பார்வைத்திறனையும், அறிவாற்றலையும் அதிகரிக்க சுண்டைக்காய் உதவுகிறது.
சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலம், பசி உணர்வு அதிகமாகி, உடல் ஆரோக்கியம் மேம்படுத்த உதவுகிறது.
பச்சையான சுண்டைக்காய்களை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால், மூலம் நோய் பிரச்சனை விரைவில் குணமாகும்.
ஜலதோஷம் அல்லது சளித் தொல்லையால் பாதிக்கப்படுபவர்கள், பிஞ்சு சுண்டைக்காயைச் சமைத்து சாப்பிட்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.
சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி, ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.
உடல் சோர்வு, மூட்டுவலி போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள், சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.