Tap to Read ➤

ஊற வைத்த வெந்தயம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

வெந்தயம் ஆரோக்கிய நன்மைகள் கொண்டது.
HTML Tamil
உணவுக்கு தினசரி பயன்படுத்தப்படும் வெந்தயத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்டுகள் நிறைந்துள்ளன.
இரவில் சிறிது வெந்தயத்தை ஊறவைத்து, காலையில் அதன் தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால் உடல் ஆரோக்கியம் பெறும்.
இரவில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துகொள்வோம்.
செரிமானப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். வயிறு வீக்கம் மற்றும் வாயு தொந்தரவு பிரச்சனைகள் சரியாகும்.
கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கும். உடல் எடையை குறைக்க தினமும் ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு வெந்தயம் பயன்படுகிறது. சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.
நீரழிவு நோயாளிகள் ஊறவைத்த வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
எலும்புகளை பலப்படுத்த வெந்தயம் உதவுகிறது. வெந்தயத்தை சாப்பிட்டால் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.
பித்த பிரச்சனை உடையவர்கள் ஊறவைத்த வெந்தய தண்ணீரை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கபம் அதிகமாக உள்ளவர்கள் வெந்தயத்தை ஊறவைத்தோ அல்லது முழு தானியமாகவோ சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.