Tap to Read ➤

அங்கத் துடிப்புகளால் ஏற்படும் பயன்கள் என்னென்ன?

அங்கத் துடிப்புகள் உடம்பில் எப்போதும் நிகழ்வதில்லை.
HTML Tamil
உடல் பகுதியில் சில இடங்கள் துடித்தால் சில பலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
உடலில் எந்தப் பகுதி துடித்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்
உச்சந்தலையில் துடிப்பு உண்டானால் துன்பம் நீங்கும். தலை பாகம் துடித்தால் பெருமை, புகழ், செல்வம் உண்டாகும்.
நெற்றியின் இடதுபாகம் துடித்தால் நிறைந்த செல்வமும், வலது பாகம் துடித்தால் நோயும் நீங்கும்.
கண்ணின் புருவங்கள் துடித்தால் பெருமை சேரும். இடது கண்ணின் இமை துடித்தால் செல்வம், சுக வாழ்க்கை ஏற்படும்
கன்னங்கள் துடித்தால் பொருளும், செல்வமும் அடைய வாய்ப்புள்ளது. நல்ல செய்திகள் தேடி வரும்.
மூக்கின் வலது பாகம் துடித்தால் நற்பாக்கியம், செல்வமும், இடது பாகம் துடித்தால் செல்வமும் உண்டாகும்.
வலது தோள்பட்டை துடித்தால் பணக்கஷ்டம் நீங்கும். இடது தோள்பட்டை துடித்தால் ஆரோக்கியம் மேம்படும்.
வலது முழங்கை துடித்தால் தவப்பயனும், இடது முழங்கை துடித்தால் தனச் சேர்க்கையும் உண்டாகும்.
வலது மற்றும் இடது கை விரல்கள் துடித்தால் லாபம், செல்வம், தனம், நல்ல காரியம் போன்றவை நடைபெறும்.
இடது தொடை துடித்தால் நல்ல செய்தியும், இரு தொடைகளும் துடித்தால் செல்வமும் உண்டாகும்.
10 கால் விரல்களும் துடித்தால் சிறப்பு மிக்க வாழ்க்கை கிடைக்கும் என கூறப்படுகிறது.