Tap to Read ➤

சம்மணமிட்டு அமர்ந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

தரையில் கால்களை மடக்கி அமர்வது ஓய்வு நிலையாக கருதப்படுகிறது.
HTML Tamil
வீடு மற்றும் அலுவலகம் என பொதுவாக நாம் எப்போதும் நாற்காலியில் கால்களை தொங்கவிட்ட நிலையில்தான் அதிக நேரம் அமர்ந்திருக்கிறோம்.
நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்திருப்பதால் முதுகுவலி, மூட்டுகள் நகர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது.
கால்களை தொங்கவிட்ட நிலையில் அமர்வதால், உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப் பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது.
நாற்காலியில் கூனிக் குறுகி அமர்வதை தவிர்த்து விட்டு, தரையில் சம்மணமிட்டு நிமிர்ந்து அமரும்போது, உடலுக்கு நிலையான தன்மை உண்டாகும்.
கால்களை மடக்கி, சம்மணமிட்டு தரையில் அமரும்போது, இடுப்புக்கு மேலே ரத்த ஓட்டம் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.
சம்மணமிட்டு அமர்ந்தால், கால்களுக்கும், இடுப்பைச் சுற்றியுள்ள தசைகளுக்கும் வலிமை கிடைக்கிறது. இடுப்பு இணைப்புகளில் நெகிழ்வுத் தன்மையும் ஏற்படும்.
உணவு சாப்பிடும்போது தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால், ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்கு செல்லும்போது ஜீரணம் நன்றாக நடைபெறும்.
தரையில் உட்கார முடியாதவர்கள், டைனிங் டேபிளில் கால்களை மடக்கி வைத்து அமர்ந்து கொண்டு, சாப்பிடுவது நல்லது.
தரையில் அமர்ந்தால் மன அழுத்தம் குறையும். உடலில் ஆக்ஸிஜன் ஓட்டமும் அதிகரிக்கும்.
தரையில் சம்மணமிட்டு அமந்து வருவது, ஆயுள் காலத்தையும் அதிகப்படுத்தும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நமது உடல் அமைப்பின்படி தரையில் சம்மணமிட்டு அமர்வதே சிறந்த வழிமுறை என்பதால், குறிப்பிட்ட நேரமாவது தரையில் உட்கார்ந்து பயனடைவோம்.