Tap to Read ➤

யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
HTML Tamil
யோகா என்பது உடலையும், மனதையும் தியானம் மற்றும் சுவாச பயிற்சி மூலம் ஒன்றினைக்கும் ஒரு பயிற்சி முறையாகும்.
யோகா பயிற்சியால், அஜீரணம், வாயு மற்றும் வயிறு தொடர்பான நோய்கள் நீங்கி, செரிமான அமைப்பு மற்றும் இரைப்பை குடல் செயல்பாடுகள் மேம்படுகின்றன. இதனால் மலச்சிக்கல் நீங்குகிறது.
யோகா இரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக் குறைப்பதோடு, அதனை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
யோகா செய்வதன் மூலம் கணையத்தில் இன்சுலின் உற்பத்திக்கான திறன் அதிகரிக்கிறது.
தினமும் தவறாமல் யோகா பயிற்சி செய்து வந்தால் குறிப்பிடத்தக்க அளவில் உயர் இரத்த அழுத்தம் குறையும்.
உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கின்ற இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க யோகா உதவுகிறது
யோகா செய்வதன் மூலம் மன அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தம் குறைந்து, இதயம் ஆரோக்கியமாக செயல்படுகிறது.
உங்கள் மனதை முழுமையாக நிதானப்படுத்தி தேவையற்ற பதட்டங்களைச் தவிர்க்க செய்வதனால் நிம்மதியான தூக்கத்திற்கு யோகா உதவுகிறது.
யோகா மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம், உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது.
யோகா சுவாசம் மற்றும் தியானம் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி நம்முள் ஏற்படும் கோபத்தை குறைக்கிறது.