Tap to Read ➤

ஆண்களின் முடி உதிர்வுக்கான காரணங்கள் என்ன?

முடியை பராமரிக்க சில டிப்ஸ்..!!
Sidhanathan K
சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிக வெப்பநிலை, மாறிவரும் உணவுமுறை போன்ற காரணங்களால் முடி உதிர்தல் பிரச்சனை ஆண்களிடையே அதிகரித்து வருகிறது.
கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு முப்பத்தைந்து வயதில் முடி உதிர ஆரம்பிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் அவர்களுக்கு 35 - 80% வரை முடி உதிர்வு ஏற்படுகிறது.
தினமும் குளிக்கும்போது தலைமுடியை மெதுவாக சுத்தம் செய்யவும். தலைமுடியை அழுத்தி தேய்த்து குளித்தால் முடியின் வேர்கள் வலிமையை இழக்கும்.
அடிக்கடி ஷாம்பு போட்டு குளிக்காமல், வாரத்திற்கு இருமுறை என வழக்கப்படுத்திக் கொள்ளவும். ஏனெனில் ஷாம்பூவில் உள்ள ரசாயனங்கள் முடி உதிர்வை அதிகரிக்கும்.
மன அழுத்தம் முடி உதிர்தலுக்கு முக்கிய காரணம் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வெப்ப மண்டலத்தை சேர்ந்தவர்களுக்கு குளிர்ந்த நீர் சிறந்தது. ஆனால் பலர் எப்போதும் வெந்நீரில் குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வெந்நீரின் வெப்பம் முடி உதிர்வை உண்டாக்கும்.
சிலர் தலைசீவுவதற்கும், தங்களுக்கு ஏற்றவாறு ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொள்வதற்கும் ஹேர் க்ரீமை பயன்படுத்துவார்கள். கண்டிப்பாக இந்த செயல்கள் முடி உதிர்வை அதிகரிக்கும்.
தினமும் தலைக்கு குளித்தாலே முடி இடுக்குகளில் உள்ள அழுக்குகள் போய்விடும். ஆனால் சிலர் வாரக்கணக்கில் தலைக்கு குளிக்காமல் இருப்பார்கள். இதனால் முடியில் அழுக்கு அதிகமாகி முடி உதிர ஆரம்பிக்கும்.
பலர் ஹீட்டர்களை பயன்படுத்தி முடியை உலர்த்துகிறார்கள். ஆனால் ஹீட்டரில் இருந்து வரும் சூடான காற்று முடியை வலுவிழக்கச் செய்யும்.
ஆயில் பேஸ் என்பதற்காக பலர் தலைக்கு எண்ணெய் தடவுவதில்லை. இது மிகவும் தவறானது. தேங்காய் எண்ணெயில் உள்ள மூலக்கூறுகள் முடியை நிலைப்படுத்தி முடி உதிர்வை குறைக்கிறது.
இரும்பு, துத்தநாகம், வைட்டமின் டி, புரதம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம்.
பொரித்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், அதிக ஐஸ்கிரீம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.