இயற்கையாகவே நம் கண்கள் துடிப்பதற்கு பல காரணங்கள் உள்ளது
ஒரு சில நேரங்களில், ஒரு பக்கத்திலோ, அல்லது இரண்டு கண்களில் துடிப்பு சற்று வேகமாக இருக்கும்
ஆனால் அந்த வேகமான துடிப்பு ஒரு சில நிமிடங்களில் தானாகவே நின்று விடும், இதனால் எந்த பிரச்சனைகளும் ஏற்படாது
உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படும்போது, கண்களில் துடிப்பு ஏற்படும்
கண்கள் துடிப்பதற்கு காரணம் தூக்கயின்மை, மது அருந்துவது, உடல் சோர்வு, மன அழுத்தம் போன்ற காரணங்கள் உண்டு
அதிக அளவில் காபி, டீ, குளிர் பானங்கள் குடிப்பது, ஊட்டச்சத்து குறைபாடு, வெகு நேரம் படித்து கொண்டு இருப்பது, மேலும் மருந்துகளின் பக்க விளைவுகள் என பல காரணங்கள் ஆகும்
பொதுவாக இது எல்லோருக்கும் வருவதால் பயப்பட அவசியம் இல்லை, ஆனால் பல நாட்கள் நீடித்தால், கட்டாயம் மருத்துவ ஆலோசனை தேவை