Tap to Read ➤

வாடகைத் தாய் குழந்தையால் ஏற்படும் சிக்கல்கள் என்ன?

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
HTML Tamil
வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் பெற்றது, நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது,
வாடகைத் தாய் சர்ச்சை குறித்து நடிகை நயன்தாரா கடிதம் மூலம் விளக்கம் அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டால் ஏற்படும் சிக்கல்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
பெண்ணின் கருப்பையில் வளரும் கருவின் ஆரோக்கியம் முழுவதும் குழந்தையை சுமக்கும் தாயிடம் தான் உள்ளது.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்கள் மட்டுமே வாடகைத்தாய் என்னும் வேலைக்கு ஒப்புக்கொள்கிறார்கள்
நடுத்தர மக்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் போது கருவின் ஆரோக்கியம் சற்று பாதிக்க வாய்ப்புள்ளது.
வாடகைத் தாய்க்கு ஏதேனும் நோய்த்தொற்று இருந்தாலோ அல்லது ஏற்பட்டாலோ அதனை சரியாக கவனிக்காவிட்டால் அது குழந்தையை பாதிக்கும்.
கர்ப்பகால நீரழிவு, உயர் ரத்த அழுத்தம், பால்வினை நோய் உள்ளிட்டவைகள் இருந்தாலும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
வாடகைத் தாய் பெண், மன ரீதியான அழுத்தத்தை சந்தித்தால், அது வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கவே செய்யும்.
ஒருவேளை உடல் ரீதியாக குறைபாடுகளுடன் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தையை வளர்க்க, குழந்தைக்குரியவரும், வாடகைத் தாயும் தயக்கம் கட்ட வாய்ப்புள்ளது.
10 மாதம் சுமந்து குழந்தை பெற்ற வாடகைத் தாயே அந்தக் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால், குழந்தைக்கும், அவருக்கும் நெருக்கம் உண்டாகிறது.
இதனால் குழந்தையை வாடகைத் தாய் பிரிய மனமின்றி, விட்டுக் கொடுப்பதிலும் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது