Tap to Read ➤

ஒவ்வொரு ராசியினரும்  செய்ய வேண்டிய தானங்கள் என்னென்ன?

12  ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.
HTML Tamil
மேஷம்

சிவன் கோவில்களுக்குச் சென்று வரும் போது வாசலில் உள்ள ஏழைகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தானம் செய்தால் பலன் கிடைக்கும்.
ரிஷபம்

செவ்வாய்க் கிழமைகளில் ஏழை எளிய மக்களுக்கு சாம்பார் சாதம் தானம் செய்ய வேண்டும். ஏழை பெண்களின் திருமணத்துக்கு முடிந்த பொருட்களை தானம் செய்யலாம்.
மிதுனம்

புதன் கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்து, வெண் பொங்கலை தானம் செய்யலாம். ஏழை மாணவர்களின் படிப்புக்கு பண தானம் கொடுப்பதும் நல்லது.
கடகம்

பசு மாட்டுக்கு உணவு தானம் செய்ய வேண்டும். ஏழை நோயாளிகளுக்கு மருந்து வாங்கி தானம் கொடுத்தால் நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.
சிம்மம்

ஏழை - எளியோருக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுக்கலாம்.
கன்னி

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்யவேண்டும். ஏழை மாணவர்களுக்கு உதவிகள் செய்யலாம்.
துலாம்

ஏழை எளியோருக்கு வெண் பொங்கல் தானம் செய்ய வேண்டும். ஆதரவற்ற இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு, கல்வி உதவி தொகை வழங்கலாம்.
விருச்சகம்

மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் செய்ய வேண்டும். அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் தானம் செய்யலாம்.
தனுசு

குரு பகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து, பிறகு பக்தர்களுக்கு தானம் செய்யலாம். செவ்வாய் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்யலாம்.
மகரம்

 ஏழை எளிய பெண்களின் திருமணத்துக்கு முடிந்த உதவிகளை செய்யலாம். வாயில்லா ஜீவன்களுக்கு, தீவனம் வாங்கி கொடுக்கலாம்.
கும்பம்

 ஏழைகளுக்கு உணவு தானம் செய்வது நல்லது. ஏழை நோயாளிகளுக்கு மருந்து பொருட்கள் வாங்கிக் கொடுத்தால் வளமான வாழ்வு அமையும்.
மீனம்

ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வந்தால் புண்ணியம் அதிகரிக்கும். ஐய்யப் பக்தர்களுக்கு உதவினால் கூடுதல் நன்மை உண்டாகும்.