Tap to Read ➤

நின்றவாறு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

நின்றவாறு தண்ணீர் குடித்தால் 'ஹெர்னியா' என்னும் குடலிறக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
HTML Tamil
உடல் உறுப்புகள் சரியாக இயங்கவும், நீர்ச்சத்து குறைபாடில்லாமல் இருக்கவும் தினசரி குறிப்பிட்ட அளவு தண்ணீர் குடிப்பது அவசியமாகும்.
அவசர அவசரமாக தண்ணீரை குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக நிதானமாக தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது.
எப்போதும் தண்ணீர் குடிக்கும்போது, உட்கார்ந்து கொண்டு தண்ணீர் குடிக்க வேண்டும். நின்றவாறு தண்ணீர் குடிக்கக் கூடாது.
நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும்போது, தண்ணீர் வயிற்றிற்கு அதிவேகமாக செல்லும். இதனால் 'ஹெர்னியா' எனும் குடலிறக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
நின்று கொண்டே தண்ணீர் குடிக்கும்போது, குடலில் தண்ணீர் நேராக சென்று குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இதனால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை பாதிக்கப்படும்.
நின்று கொண்டோ அல்லது நடந்தவாறோ தண்ணீர் குடித்து வந்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்து விட வாய்ப்பு ஏற்படுகிறது.
சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கப்பட்டால், நச்சுக்கள் அப்படியே தங்கி, சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு அதிகம் உள்ளது.
உட்கார்ந்து கொண்டு தண்ணீரை குடித்தால், உடலின் அனைத்து இடங்களிலும் நீர் நுழைந்து, நச்சுக்களை அனைத்தையும் சிறுநீரகங்களுக்கு கொண்டு சென்று, முறையாக வெளியேற்றிவிடும்.
நின்றுக்கொண்டே தண்ணீர் குடித்து வந்தால், மூட்டுப் பகுதிகளில் உள்ள நீர்மங்களின் சமநிலைக்கு இடையூறு ஏற்பட்டு, மூட்டு வலிக்கு உட்படுத்தி, ஆர்த்ரிடிஸ் ஏற்பட வழிவகுத்து விடும்.
டம்ளரில் வாய்வைத்து தண்ணீர் குடித்தால், காது தொடர்பான நோய்கள் வராது. அண்ணாந்து தண்ணீர் குடித்தால் காது நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.