Tap to Read ➤

இரவில் தாமதமாக சாப்பிட்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.
HTML Tamil
உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உணவு எப்படி முக்கியமோ, அதுபோல, குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவதும் முக்கியமானது.
இரவில் தாமதமாக சாப்பிடுவதால், உடலுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை தெரிந்துகொள்வோம்.
இரவில் நேரம் கடந்து சாப்பிடுவதால், செரிமான மண்டலத்திற்கு இடையூறு ஏற்படும். இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
இரவு 7 மணிக்குள் சாப்பிட்டுவிட்டு, 9 மணிக்கு தூங்க சென்றால், நிம்மதியான தூக்கத்திற்கு வழி வகுக்கும்.
இரவு உணவிற்கும், மறுநாள் காலை உணவிற்கும் இடையே 10 மணி நேரம் இடைவெளி இருப்பது நல்லது. இது உடல் எடையை குறைக்க உதவும்.
இரவு 7 மணிக்குள் உணவு சாப்பிடும்போது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைய வாய்ப்பு ஏற்படும்.
இரவில் தாமதமாக சாப்பிட்டால் உணவு நன்றாக ஜீரணமாகாது. இதனால் அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
இரவு சாப்பாட்டின் அளவு அதிகமானால், மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதற்கும் வழிவகுத்துவிடும்.
இரவில் மிகத் தாமதமாக சாப்பிட்டால், நினைவு திறன் மற்றும் மூளையின் செயல்பாடு பாதிக்கப்படும் என ஆய்வுகள் கூறுகின்றன.
இரவில் நேரம் கடந்து சாப்பிட்டால், வயிற்று உப்புசம், வாயு தொல்லை, உயர் ரத்த அழுத்தம் போன்ற பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.