Sidhanathan K       Nov 20, 2023

பரோட்டோ அதிகமாக சாப்பிடுவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்..?

விலை குறைவாக கிடைக்கும் பரோட்டாவை பெரும்பாலும் சிலர் இரவு நேரங்களில் உணவாக எடுத்துக்கொள்கின்றனர்.

பொதுவாக மைதா மற்றும் ரவையிலிருந்து தயாரிக்கப்படும் பரோட்டா உடலுக்கு பல்வேறு தீங்குகளை விளைவிக்கிறது.

இந்த மைதா மாவு கோதுமையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கோதுமை மாவிலுள்ள நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து கூறுகளான தவிடு மற்றும் எண்டோஸ்பெர்ம் ஆகியவை பதப்படுத்தப்பட்டு நீக்கப்படுகின்றன.

இவ்வாறு எல்லா சத்துக்களும் நீக்கப்பட்ட மைதாவில் செய்யப்பட்ட உணவுகளை உட்கொண்டு வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எதுவும் கிடைக்காது.

மேலும், கோதுமையிலிருந்து தயாரிக்கப்படும் மைதா மாவை வெண்மையாக மாற்ற, பென்சாயில் பெராக்சைடு (Benzoyl Peroxide) மற்றும் "அலாக்ஸான்' (Alaxan) போன்ற வேதிப்பொருள்களும் கலக்கப்படுகிறது.

மைதாவில் உள்ள குளுடேன் ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இது அதிக கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளதால் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. எனவே மைதாவை அதிகமாக உட்கொள்வது இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தும்.

பரோட்டா போன்ற மைதா உணவுகளில் அதிக எண்ணெய் பயன்படுத்துவதால், உடல் பருமன் அதிகரித்து எடை கூடும் வாய்ப்புகள் அதிகம்.

மைதாவில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நீக்கப்பட்டு அமிலத்தன்மை மட்டுமே காணப்படுவதால், எலும்புகளில் உள்ள கால்சியம் குறைந்து எலும்புகள் பலவீனமாகிவிடும்.

பரோட்டா சாப்பிடுவது இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களை பாதித்து மாரடைப்பு மற்றும் மலச்சிக்கல் போன்ற நோய்களை ஏற்படுத்துவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பாரசீக நாட்டு உணவான பரோட்டா முதலில் வளர்ப்பு விலங்குகளுக்கு உணவாக கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories