Sidhanathan K       Sep 05, 2024

ஹெபடைடிஸ் வைரஸ் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் என்னென்ன..?

ஹெபடைடிஸ் வைரஸ் ஆனது தீவிரமான கல்லீரல் வீக்கத்தின் நோக்குறியாகும். இது கல்லீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும்.

ஹெபடைடிஸ் வைரஸ் தோற்று நோய் ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளையும் காட்டாமல் இருக்கலாம், ஆனால் இந்நோய் அதன் தீவிர நிலையை அடைந்தவுடன் தான் அறிகுறிகள் முழுமையாக வெளிப்படும்.

அப்படியான சமயங்களில் உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

சோர்வு, பசியின்மை, காய்ச்சல், தசை அல்லது மூட்டு வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, எடை இழப்பு போன்றவை இந்நோயின் பொதுவான அறிகுறிகளாகும்.

ஹெபடைடிஸ் அழற்சியை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களில் ஏ (HAV), பி (HBV), சி (HCV), டி (HDV), இ (HEV) என 5 வகைகள் உள்ளன.

உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய இந்த கல்லீரல் நோய்த்தொற்றானது, அதிகமாக ஹெபடைடிஸ் பி வைரஸால் ஏற்படுகிறது. ஹெபடைடிஸ் பி ஆனது வயதானவர்களில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

எனவே, அறிகுறி உணர்ந்து பாதிப்பை அறிந்தவுடன் தாமதிக்காமல் மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வது நல்லது. மோசமான சுகாதாரத்துடன் வசிப்பவர்களுக்கு இந்நோய்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஹெபடைடிஸ் வராமல் தடுக்க தடுப்பூசி போடுவது கட்டாயம் ஆகும். சோப்பு மற்றும் தண்ணீருடன் அடிக்கடி கைகளை கழுவுவதன் மூலம் இந்நோய் ஏற்படுவதை தடுக்கலாம்.