Sidhanathan K       Mar 20, 2025

உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் குறைந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்..?

ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் ஆனது குரல், இரத்த சிவப்பணு உற்பத்தி, மீசை, தாடி போன்ற முடி வளர்ச்சி, எலும்பு மற்றும் தசை வளர்ச்சி உட்பட பல செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றுகிறது.

அதேபோல் ஆண்களில் முக்கியமாக விந்தணு உற்பத்தி, விறைப்புத்தன்மை போன்ற பாலியல் இயக்கத்திற்கும் உதவுகிறது.

ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருந்தால் குறைந்த லிபிடோ, விறைப்புத்தன்மை, மனச்சோர்வு, எரிச்சல் மற்றும் தசை வெகுஜன குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இதுதவிர, பாலியல் ஆர்வம் குறைதல், முடி உதிர்தல், எலும்பு அடர்த்தி குறைதல், எடை அதிகரிப்பு, கவனக்குறைவு, தூக்கமின்மை போன்ற பல உடல் ரீதியான மற்றும் மன ரீதியான பாதிப்புகளும் ஏற்படலாம்.

இப்படி பல்வேறு வகையில் உதவக்கூடிய டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உண்ண வேண்டிய பழங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மாதுளை ஆணுறுப்பில் உள்ள இரத்த நாளங்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, விறைப்புத்தன்மையை போக்குகிறது. அடிக்கடி மாதுளை சாப்பிடுவதால் டெஸ்டோஸ்டிரோன் அளவை 24 சதவீதம் வரை அதிகரிக்கலாம்.

தர்பூசணியில் உள்ள சிட்ருலின் அமினோ அமிலம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.

ஸ்ட்ராபெர்ரியில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் உடலில் உள்ள கார்டிசோலின் அளவை குறைப்பதோடு, டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி குறையாமல் பாதுகாக்கிறது.

அன்னாசிப்பழத்தில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை இயற்கையாகவே தூண்டும் புரோமெலைன், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் உள்ளன. இது ஆண்களில் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த உதவுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வாழைப்பழத்தில் உள்ள சிறப்பு நொதியான புரொமைலின் (Bromelain) உடலுறவின் போது ஏற்படும் விறைப்புத்தன்மையை குறைக்க உதவுகிறது. மேலும், இது டெஸ்டோஸ்டிரோன் சுரப்பை அதிகரிக்கிறது.

அதேபோல, அவகேடோ, திராட்சை, செர்ரி, பெர்ரி, கோகோ போன்ற பழங்களில் இயற்கையாகவே டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் பண்புகள் நிறைந்துள்ளன.