Tap to Read ➤

காலை உணவைத் தவிர்ப்பதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க காலை உணவு உதவுகிறது.
HTML Tamil
அவசர அவசரமாக பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்குச் செல்வோர்களில் சிலர், நேரமின்மையால் காலை உணவை தவிர்த்து விடுகின்றனர்.
காலை உணவைத் தவிர்ப்பதால் உடல் ஆரோக்கியம் கெடுவதோடு, உடலுக்கும் பல்வேறு உபாதைகள் உண்டாகுகின்றன.
காலை உணவை தவிர்ப்பதால், இரைப்பை காலியாக இருக்கும். இதனால், தலைவலி, தலை சுற்றல், கண் எரிச்சல், வாந்தி போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
காலை உணவைத் தவிர்ப்பதால், குளுக்கோஸ் வளர்சிதை சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டு, சர்க்கரை நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
காலை உணவைத் தொடர்ந்து தவிர்த்து வந்தால், வயிற்றில் புண், வயிற்று உப்புசம், ரத்த அழுத்தம், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
உடல் எடையை குறைப்பதற்காக காலை உணவை தவிர்ப்பவர்கள், நொறுக்குத்தீனி வகைகளை அதிகம் எடுக்கிறார்கள். மதியமும் அதிகமாக சாப்பிடுவதால், உடல் எடையை குறைப்பது கடினமாகிறது.
சர்க்கரை நோயாளிகள் காலை உணவை தவிர்ப்பதால், மயக்கம், தலை சுற்றல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்பு ஏற்படுகிறது.
காலை உணவை சாப்பிடாமல் இருந்தால், வாய்ப் பகுதியில் கிருமிகள் அதிகரித்து, வாய்நாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டாகிறது.
காலை உணவை தவிர்ப்பதால், செரிமானம் செய்ய உணவு இல்லாமல், அமிலங்கள் குடலை அரிக்க தொடங்கும். இதனால், குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும்.
காலையில்  சாப்பிடாமல் இருந்தால் மன அழுத்தம் ஏற்படும். சிறுசிறு விஷயங்களுக்குக் கூட கோபம் வந்துவிடும்.
காலை உணவைத் தவிர்ப்பதால், பசி காரணமாக சரியாக யோசிக்கவோ, சிந்திக்கவோ முடியாது. படிப்பில் கவனம் செலுத்தவும் முடியாது.