Tap to Read ➤

ஹீல்ஸ் அணிவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன ?

ஹை ஹீல்ஸ் பின்னால் இருக்கும் ஆபத்துகள் !!
Sidhanathan K
பொதுவாக பெண்கள் தங்களை அழகாக வைத்துக் கொள்ள விரும்புவார்கள். அதனால் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக விதவிதமான ஹை ஹீல்ஸ் செருப்புகளை வாங்குகிறார்கள்.
உலகளவில் 60% க்கும் அதிகமான பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவதை விரும்புகிறார்கள்.
ஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு பிளான்டர் பேசிட்டீஸ் (plantar fascicts) எனப்படும் குதிகால் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஹீல்ஸ் அணியும் போது குதிகால் சற்று உயரமாக இருக்கும். இதனால் மூட்டு, முழு உடல் எடையையும் தாங்க வேண்டியிருப்பதால் மூட்டு வலி ஏற்படுகிறது.
தொடர்ந்து ஹீல்ஸ் அணியும்போது மூட்டு ஜவ்வில் தேய்மானம் ஏற்பட்டு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதிருக்கும்.
கால் தடுமாறும் நேரங்களில் தசை நாண்களில் அதிகளவு பாதிப்பு, சுளுக்கு, தசை முறிவு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
ஹீல்ஸ் அணிபவர்கள் சில சமயங்களில் குதிகால் சிவந்து லேசான வலியை அனுபவிக்கிறார்கள். இது குதிகால் உள் எலும்புகள் சேதம் அடைந்ததற்கான அறிகுறியாகும்.
ஹை ஹீல்ஸ் அணியும் போது குதிகால் உயர்த்தப்படுவதால், நாளடைவில் கணுக்கால் தசையை குதிகால் எலும்புடன் இணைக்கும் அகில்லெஸ் (ACHILLES TENDON) தசைநார் நெகிழ்வுத்தன்மையை இழந்து இறுக்கமடைகிறது.
இந்த வகையான ஹீல்ஸ் அணியும் பெண்களின் கீழ் இடுப்பு பெரியதாகுதல், முதுகுப்பகுதி வளைதல் (கூன் விழுதல்) போன்றவை ஏற்படலாம். இது தவிர, சில பெண்களுக்கு கருப்பைச் சிக்கல்களும் ஏற்படலாம்.
அதையும் மீறி ஹை ஹீல்ஸ் செருப்புகளை பயன்படுத்த நினைத்தால், அதிக நேரம் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.