Tap to Read ➤

ஆபத்து என்றும் அறிந்தும் நாம் உண்ணும் உணவுப் பழக்கங்கள் என்ன ?

அதிகமாக சாப்பிடக்கூடாத உணவு வகைகள் !!
Sidhanathan K
நன்றாக பசி எடுக்கும் முன்னரே அதிகளவு உணவினை சாப்பிடக்கூடாது.
சிறுநீர் உள்ளிட்ட இயற்கை உபாதைகள் வரும் போது அதை அடக்கிக் கொண்டு உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
அரைகுறையாக வெந்த உணவும், அதிகப்படியாக வெந்த உணவும் ஆரோக்கியத்துக்கு கெடுதல்.
அன்றைய தினம் சமைத்த உணவை அன்றே பயன்படுத்த வேண்டும். உணவை குளிர்சாதனப் பெட்டியில் அதிக நேரம் வைத்திருந்து, பின்னர் சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்கள் அதிக அளவில் இழக்கப்படும்.
குளிர் காலங்களில், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளையும், மசாலா மற்றும் எண்ணெய் அதிகமாகவும் பயன்படுத்தி சமைக்கப்பட்ட உணவுகளையும் தவிர்த்துவிட வேண்டும்.
சூடான உணவுகளையும் குளிர்ச்சியான உணவையும் கலந்து சாப்பிடக் கூடாது.
மைதாவினால் செய்யப்படுகின்ற பரோட்டா, சமோசா மற்றும் பப்ஸ் வகைகள் இதயக்கோளாறுகளை ஏற்படுத்துபவை.
பீசா மற்றும் பர்கர் உடல் பருமனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
உருளைகிழங்கு சிப்ஸ் மற்றும் நூடுல்ஸ் புற்றுநோயினை விளைவிக்கும்.
பொதுவாக இந்த உணவுகள் அனைத்தும் செரிமான கோளாறுகளை உண்டாக்குகின்றன.
செயற்கை குளிர்பானங்களான பெப்சி, கொக்ககோலா , 7 அப் போன்றவை சிறுநீரக கோளாறுகளை உண்டாக்கும்.