Tap to Read ➤

ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள் என்னென்ன?

உணவு உடலுக்கு மட்டுமின்றி, மூளைக்கும் நன்மை தருகிறது.
HTML Tamil
பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற குழந்தைகளுக்கு படிப்பு மட்டும் போதாது. மூளை வளர்ச்சிக்கான உணவுகளையும் உண்ண வேண்டும்.
மூளையை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளை உண்பதால் நினைவாற்றல் அதிகரிப்பதோடு, ஞாபக சக்தியும் கூடுகிறது.
பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகள், நரம்புத்தசை மண்டலத்தை இயக்கி, மூளை செல்களை நன்கு செயல்பட வைக்கிறது.
முட்டை சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையும் சுறுசுறுப்பாக இருக்கும்.
குழந்தைகள் நட்ஸ் அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் டி சத்து, அறிவுத்திறனை அதிகரிக்க உதவும்.
வைட்டமின் பி மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசி உணவை சாப்பிட்டால், மூளை ஆரோக்கியமாக இருக்கும்.
மீன்கள் சாப்பிடுவதால், மூளையின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மூளைச் செல்களின் இயக்கத்தையும் அதிகரிக்கிறது.
தக்காளி, கேரட், பீன்ஸ், கீரை உணவுகளையும் தினமும் கொடுத்தால், குழந்தைகளின் மூளை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
க்ரீன் டீ, மூளைச் செல்களை பாதிப்படையாமல் செய்கிறது. ஞாபக சக்தியை அதிகரித்து, சோர்வான மனநிலை மாற்றுகிறது.
தினமும் காலையில் எழுந்து ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், எடை குறைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
தினமும் போதிய தண்ணீர் குடித்து வந்தால், மூளையில் வறட்சி ஏற்படாமல், மூளைச் செல்களும் சுறுசுறுப்போடு செயல்படும்.