Tap to Read ➤

குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?

குளிர்காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.
HTML Tamil
குளிர்காலத்தில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி, வழக்கத்தைவிட குறைவாக இருப்பதால், விரைவில் உடல்நலக் கோளாறு ஏற்படுகிறது.
குளிர்காலத்தில் இரத்த சோகை, சோர்வு, எரிச்சல், வாய்ப் புண், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை எடுத்துக்கொண்டால், நோய்கள் வராமல் தவிர்க்கலாம்.
நார்ச்சத்து, புரதங்கள், வைட்டமின் ஈ, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அடங்கிய உலர் பழங்களை சாப்பிடலாம்.
வைட்டமின்களும், ஆன்டி- ஆக்சிடன்ட்டுகளும் உள்ள பேரிக்காயை சாப்பிடலாம். பேரிக்காய், உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கும் தன்மை கொண்டது.
குளிர்காலத்தில் கேரட், முள்ளங்கி, காலிஃபிளவர் போன்ற காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது.
குளிர்காலத்தில் மாதுளை பழத்தை சாப்பிட்டால், உடலில் ரத்த ஓட்டம் மேம்படும். உடலில் ரத்தம் பற்றாக்குறையை  போக்கவும் மாதுளை உதவுகிறது.
குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ப்ளம்ஸ் சாப்பிடலாம். ப்ளம்ஸ் சாப்பிடுவதால் உடல் பலமும் பெறும்.
இறைச்சி, மீன், பருப்பு வகைகள், சீஸ் போன்றவற்றை உணவுகளில் சேர்த்துக்கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
உடலில் வெப்பத்தை உருவாக்க உதவும் உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் போன்ற வேர் காய்கறிகளை குளிர்காலத்தில் சாப்பிடலாம்.
குளிர்காலங்களில், பூண்டு, மிளகு, இஞ்சி போன்ற மசாலாப் பொருட்களை உணவில் சேர்த்துக்கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
குளிர்காலத்தில் பாதாம், வால்நட், பிஸ்தா, வேர்க்கடலையை சாப்பிடலாம். இவைகள், காய்ச்சல் வராமல் தடுக்க உதவுகின்றன.